1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

மீண்டும் வருவேன்: பொங்கல் விழாவில் விஜயகாந்த் ஆவேச பேச்சு

திமுக அதிமுகவுக்கு மாற்றாக இருக்கும் என்று கருதப்பட்ட விஜயகாந்தின் தேமுதிக பின்னர் திமுக அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தியும் கூட்டணி அமைத்தும் போட்டுயிட்டு தனது தனித்தன்மையை இழந்து தற்போது பத்தோடு பதினொன்றாக கட்சிகளில் ஒன்றாக காணப்படுகிறது
 
குறிப்பாக விஜயகாந்தின் உடல்நலக் குறைவுக்கு பின்னர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல் கே சுதீஷ் ஆகியோரின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட இக்கட்சி அதல பாதாளத்திற்குச் சென்று விட்டதாக அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்கள் ’தொண்டர்களே எனது முதல் கடவுள் என்றும் மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் மீண்டு வருவேன் என்றும் கூறி இருப்பது அக்கட்சி தொண்டர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டும் பழைய மாதிரி அவர் அரசியலில் களம் இறங்கினால் நிச்சயம் அக்கட்சி மீண்டு வர வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது