பொங்கல் பயணம் ஸ்டார்ட்: ரெயில்கள் ரெடி! சிறப்பு ரயில்கள் அட்டவணை!

Prasanth Karthick| Last Modified வெள்ளி, 10 ஜனவரி 2020 (08:50 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை நாளை முதல் இயக்கவுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு மக்கள் பல்வேறு நகரங்களிலுருந்தும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் பேருந்துகள், ரயில்கள் ஆண்டுதோறும் கூட்டம் நிரம்பி வழிகின்றன. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இதற்காக இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் நாளை முதல் தொடங்குகிறது. மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக சென்னை – நெல்லை இடையே பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

நெல்லையில் இரவு 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறு நாள் காலை 5 மணிக்கு தாம்பரம் செல்லும்.

இந்த தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் 12-ம் தேதி இரவு 7.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை செல்லும்.

நெல்லையில் 18-ந்தேதி இரவு 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் செல்லும்.

நாகர்கோவிலில் 19-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் செல்லும்.

தாம்பரத்தில் 20-ந்தேதி காலை 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்  மறு நாள் அதிகாலை 2 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.

இது வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :