புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2019 (13:36 IST)

சென்னைக்கு வந்தது ஜோலார்பேட்டை தண்ணீர் – மக்கள் மகிழ்ச்சி !

ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தின் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில மாதங்களாக மழை பொய்த்து போனதால் கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் பிரச்சனை காரணமாக பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதாகவும், ஒருசில ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. தண்ணீர் பிரச்சனைப் பற்றி அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இதில் ’தமிழகத்துக்கு சீராக தண்ணீர் விநியோகம் செய்வதற்காக கூடுதலாக 200 கோடி ரூபாய் ஒதுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னைக்குக் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் ரயில் மூலம் சுமார் 10 மில்லியன் லிட்டர் குடி தண்ணீரைக் கொண்டுவருவதற்காக தனியாக 65 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்’ என அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளனர்.

இதற்காக அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக வேலூரில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஆய்வுப்பணிகள் முடிந்ததை அடுத்து மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி அங்கிருந்து ரயில்வே நிலையத்துக்கு குழாய் மூலம் கொண்டு வந்து அங்கிருந்து சென்னைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டது.

அடுத்த கட்டமாக சோதனை ஓட்டமாக மொத்தம் 50 வேகன்கள் கொண்ட இரயில் பெட்டியில் இரு நாட்களுக்கு, 25 லட்சம் லிட்டர் தண்ணீரை சென்னைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் ரயில் காலை 11.30 மணிக்கு வில்லிவாக்கம் வந்தது. அங்கிருந்து கீழ்ப்பாக்கம் கொண்டு செல்லப்பட்டது.