எட்டு வழிச்சாலை மூலம் என்னென்ன பயன்கள் ? - முதல்வர் பழனிசாமி விளக்கம்
கடந்த ஆண்டு அரசால் எட்டு வழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் விவசாய நிலத்தை அழித்துதான் சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டம் செயல்படுத்தமுடியும் என்பதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மக்களுக்கு ஆதரவாக, சமீபத்தில் அரசிடம் சில கேள்விகளையும் நீதிபதிகள் முன்வைத்தனர்.
இந்நிலையில் சேலம் - சென்னை 8 வழிச்சாலை மூலம் 70 கிலோ மீட்டர் பயணத்தை மிச்சப்படுத்தலாம் . இதன் மூலம் சுற்றுச்சுழல் பாதுகாக்கப்படும்,விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கூறியதாவது :
இந்நிலையில் சேலம் - சென்னை 8 வழிச்சாலை மூலம் 70 கிலோ மீட்டர் பயணத்தை மிச்சப்படுத்தலாம் . இதன் மூலம் சுற்றுச்சுழல் பாதுகாக்கப்படும்,விபத்துக்கள் தவிர்க்கப்படும் .இந்த திட்டம் வந்தால் தமிழக அரசுக்கு நற்பெயர் கிடைக்கும் என்பதால் அதை தடுக்கத்தான் சிலர் இத்திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறிவருகின்றனர்.
மேலும் இந்த 8 வழிச்சாலை திட்டம் என்பது சேலம் மாவட்டத்திற்கானது மட்டுமல்ல... இதனால் புதிய தொழில் வளர்ச்சிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மேம்படும், எனவே சாலைகளை அரசு அமைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.