1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (17:06 IST)

ரூ.127க்கு பிரியாணி, சிக்கன் லெக் பீஸ், சப்பாத்தி, கேக், தண்ணீர் பாட்டில்: எங்கே தெரியுமா?

சிறைக் கைதிகளின் கைப்பக்குவத்தில் சமைக்கப்பட்ட சிக்கன் பிரியாணி காம்போ பேக்கேஜில் 127 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இது தமிழகத்தில் அல்ல கேரளாவில் என்பது குறிப்பிடத்தக்கது
 
கேரளாவில் உள்ள வையூர் மத்தியச் சிறையில் கைதிகளுக்கு செய்யப்படும் உணவை, கொஞ்சம் அதிகமாக செய்து விற்பனை செய்யலாம் என சிறை நிர்வாகம் கடந்த 2011ஆம் ஆண்டு  முடிவு செய்தது. இந்த வியாபாரம் ஒரு கட்டத்தில் சூடுபிடிக்க தங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்த சிறை நிர்வாகம் தற்போது ஆன்லைனிலும் உணவு சேவையை தொடங்கியுள்ளது. இதற்காக உணவு டெலிவரி செய்யும் சுவிக்கி நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ள சிறை நிர்வாகம் ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று உணவுகளை சப்ளை செய்து வருகிறது
 
ஓட்டல் துறையில் உள்ள போட்டியை சமாளிக்கும் வகையிலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் புதிய காம்போ பேக்கேஜ் ஒன்றை சிறை நிர்வாகம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த காம்போ பேக்கேஜில் 300 கிராம் பிரியாணி, சிக்கன் லெக் பீஸ் ஒன்று, மூன்று சப்பாத்திகள், ஒரு கப் கேக், சாலட், ஊறுகாய் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஆகியவை வெறும் ரூ.127க்கு வழங்கப்படுகிறது. இவ்வளவு குறைந்த விலையில் ருசியான அதிக வகை உணவை கொடுப்பதால் ஆன்லைன் மூலம் ஆர்டர் குவிகிறது.
 
சிறையில் உள்ள கைதிகளால் சமைக்கப்படுவதால் பணியாளர்கள் சம்பளம் இல்லை என்பதால் இவ்வளவு குறைந்த விலையில் சப்ளை செய்ய முடிகிறது என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த முறையை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பின்பற்றலாமே