திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 டிசம்பர் 2017 (13:53 IST)

ரஜினிக்கு வாழ்த்து கூறிய வைகோ : நன்றி கூறி கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு மதிமுக செயலாளர் வாழ்த்து கூறியதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

 
தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதற்கு பல்வேறு தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
அந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த வைகோ “ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை அரசியல் உலகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது” எனக் கூறினார்.
 
இந்நிலையில், வைகோ வரவேற்பு தெரிவித்து ஆதரவு தெரிவித்தால் அவ்வளவுதான். ரஜினிகாந்த் அரசியலில் பிரவேசிக்க முடியாது. கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்திற்கும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஸ்டாலினுக்கும் வைகோ ஆதரவு தெரிவித்தார். அவர்களுக்கு என்ன முடிவோ அதுதான் ரஜினிக்கும்” என சிலரும்,  “நீங்கள் ஆதரவு தெரிவிச்சீட்டீங்க.. நன்றி சார்” எனவும் கிண்டலடித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.