செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2017 (22:30 IST)

கூட்டணி கட்சிகளை கழட்டிவிட ஸ்டாலின் அதிரடி முடிவா?

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் தோல்வி அடைந்தது மட்டுமின்றி டெபாசிட் இழந்தது திமுக தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. திமுக வாக்குகள் மட்டுமின்றி உடைந்து போன மக்கள் நல கூட்டணி கட்சிகளும் தனித்தனியாக திமுகவுக்கு ஆதரவு கொடுத்தும் டெபாசிட் போயுள்ளது என்றால் நிச்சயம் யோசிக்க வேண்டிய விஷயம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர்

இந்த நிலையில் திமுகவின் தோல்விக்கு காரணம் ஒருவகையில் கூட்டணி கட்சிகளே என்று மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு என தனியாக வாக்கு சதவீதம் சுத்தமாக இல்லை. விடுதலை சிறுத்தைகள் இன்னும் ஜாதி கட்சிதான். அந்த கட்சி ஆதரவு கொடுத்தால் மற்ற ஜாதியினர் ஓட்டு போட தயங்குவார்கள். வைகோ இருக்கும் கூட்டணி வெற்றி பெறாது என்பது அரசியல் செண்டிமெண்ட்.

இதன் காரணமாகவே திமுகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும், திமுகவுக்கு கூட்டணி கட்சியால் எந்த லாபமும் இல்லை என்பது மட்டுமில்லை, கூட்டணி கட்சியால் விழும் ஓட்டுக்கள் கூட விழாமல் போவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்தே போட்டியிடும் என்று மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டணி கட்சிகள் கதிகலங்கி இருப்பதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.