வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2017 (16:33 IST)

பள்ளி மாணவிகள் தற்கொலை விவகாரத்தில் ஆசிரியைகள் பணி நீக்கம்

அரக்கோணம் அருகே ராமாபுரத்தை சேர்ந்த 4 பள்ளி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 2 ஆசிரியைகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


 
அரக்கோணம் அருகே உள்ள ராமாபுரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 4 பள்ளி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகள் தற்கொலை செய்துக்கொண்டதற்காக காரணம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிகள் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளனர். இதனால் ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து வரச் செல்லியுள்ளனர். மாணவிகள் பள்ளிக்கு பெற்றோர்களை அழைத்து செல்லாததால் ஆசிரியர்கள் மாணவிகளை திட்டி வகுப்பிற்கு வெளியே நிறுத்தியுள்ளனர்.
 
இதில் மனமுடைந்த மாணவிகள் தற்கொலை செய்துக்கொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் தற்போது இரண்டு ஆசிரியைகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லில்லி, சிவகுமாரி ஆகிய தற்காலிக ஆசிரியைகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.