Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

4 மாணவிகள் தற்கொலை எதிரொலி: தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

Last Modified ஞாயிறு, 26 நவம்பர் 2017 (11:10 IST)
அரக்கோணம் அருகே 11ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவிகள் நால்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் மாணவிகளின் வகுப்பாசிரியை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி மற்றும் ஆசிரியை மீனாட்சி ஆகிய இருவரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

முன்னதாக போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்ட மாணவிகளின் உடலுக்கு மலர் வளையம் வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவமனைக்கு வந்தபோது மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆட்சியரை சூழ்ந்து கொண்டு,
நீதி கேட்டு முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :