Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அசோக்குமார் மரணத்திற்கு அன்புச்செழியன் காரணம் இல்லை: சீமான்

Last Updated: திங்கள், 27 நவம்பர் 2017 (09:33 IST)
பைனாசியர் அன்புச்செழியன் மிரட்டியதாலும், வீட்டுப்பெண்களை தூக்கிவிடுவேன் என்று தரக்குறைவாக பேசியதாலும் தற்கொலை செய்து கொள்வதாக தெளிவாக அசோக்குமார் கடிதம் எழுதி வைத்துள்ள நிலையில் சினிமாவுலகினர் சிலர் அன்புச்செழியனுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

திரையுலகினர் அன்புச்செழியனால் லாபம் அடைந்ததாலும், இனிமேலும் பெறப்போகும் லாபத்திற்காக பேசுகின்றனர் என்றால், அரசியல்கட்சி வைத்து நடத்தி வரும் சீமானும் தற்போது அன்புச்செழியனுக்கு ஆதரவாக பேசியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது

அசோக்குமார் மறைவு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சீமான், 'அசோக்குமார் தற்கொலைக்கு அன்புச்செழியன் தான் காரணம் என்று சொல்லமுடியாது. அன்புச்செழியன் திரையுலகில் இல்லை என்றால் பாதிப்படங்களுக்கு மேல் வெளியாகி இருக்க முடியாது. சினிமா உலகில் வட்டிக்கு கடன் வாங்கு நிலை புதிதல்ல, இது தவிர்க்க முடியாது என்று சீமான் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :