1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 25 ஜனவரி 2020 (16:39 IST)

மன்னிப்பு கேட்டுட்டு ஒதுங்கிடு... தினகரனுக்கு புகழேந்தி அட்வைஸ்!

டிடிவி தினகரன் கட்சியைவிட்டு ஒதுங்கிக்கொள்வது நல்லது என அதிமுக  செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டியளித்துள்ளார்.  
 
அமமுகவில் இருந்து விலகி தற்போது அதிமுகவில் இணைந்துள்ளது புகழேந்தி டிடிவி தினகரன் குறித்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அவர் கூறியதாவது,  
 
டிடிவி.தினகரனின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் ஒரு இடம்கூட கிடைக்காமல் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார்.  அவரது அரசியல் அஸ்தமனமாகிவிட்டது. டிடிவி.தினகரன் கட்சியில் நான் சேர்ந்தது மிகப்பெரிய தவறு. 
 
டிடிவி தினகரன் தன்னை எம்ஜிஆர் என நினைத்து கட்சி ஆரம்பித்தார். அப்போதே அவரது வீழ்ச்சி தொடங்கிவிட்டது. மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கட்சியைவிட்டு ஒதுங்கிக்கொள்வது நல்லது. கடந்த 2 மாதமாக டிடிவி தினகரனை காணவில்லை. இதுவரை வெளியில் தலைகாட்டாமல் உள்ளார் எனவும் கூறியுள்ளார்.