1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (22:18 IST)

அண்ணாவுடன் அரசியல் செய்தவர் உதயநிதிக்கு ஜால்ரா போடுவதா? நெட்டிசன்கள் கிண்டல்

அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களுடன் அரசியல் செய்த பழம்பெரும் அரசியல்வாதி, நேற்று அரசியலில் நுழைந்த உதயநிதிக்கு ஜால்ரா போடுவதா? என நாஞ்சில் சம்பத்தை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
 
திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்படும் பொய் பெட்டி என்ற நிகழ்ச்சியில் பேசிய நாஞ்சில் சம்பத், தம்பி உதயநிதிக்கு ஏணியாகவும் இருப்பேன், தோனியாகவும் இருப்பேன் என்று தனது பாணியில் அடுக்குமொழியில் பேசினார்.
 
இதுகுறித்து விமர்சனம் செய்து வரும் நெட்டிசன்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலா பெரிய அரசியல் தலைவர்களுடன் அரசியல் செய்த நாஞ்சில் சம்பத் தற்போது உதயநிதிக்கு ஜால்ரா போடுவது அவரது மதிப்புக்கும் மரியாதைக்கும் அழகா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
மேலும் திமுக தலைவர்களை குறிப்பாக முக ஸ்டாலினை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கடுமையாக விமர்சனம் செய்த நாஞ்சில் சம்பத் இன்று எந்த முகத்தை வைத்து கொண்டு ஸ்டாலின் மகனுக்கு ஏணியாகவும் தோணியாகவும் இருப்பேன் என்று கூறுகின்றார் என தெரியவில்லை என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.