திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (11:03 IST)

அரசியல் தெரியாது, அண்ணன் ரஜினியை தெரியும்: ராகவா லாரன்ஸ் உருக்கம்!

பெரியார் குறித்து ரஜினி பேசியதை அனைவரும் தவறாக புரிந்துக்கொண்டுள்ளனர் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.  
 
கடந்த 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்து செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளியானது.       
 
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. கேள்விப்பட்டது பத்திரிகைகளில் வந்தைத்தான் கூறினேன். இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என கூறினார்.   
ரஜினியின் இந்த கருத்துக்கு விமர்சனங்களும் ஆதரவுகளும் கலவையாகவே கிடைத்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 
 
எனக்கு அரசியல் தெரியாது, ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரைப பற்றிஎனக்கு மிக நன்றாகவே தெரியும். திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைப் பொறுத்தவரை யார் மனதையும் நோகும் படி பேசக்கூடியவர் அல்ல. ஏன் அவரை திட்டுபவர்களைக் கூட பதிலுக்கு பதில் திருப்பி திட்டாத பண்பாளர்.
எதையும் ப்ளான் செய்தோ, திட்டமிட்டோ அவதூறாக பேசக்கூடியவர் அல்ல. ஆனால் பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டதாக கூறுகின்றனர். அப்படி பேசக்கூடியவர் என்றால் 2006 ஆம் ஆண்டு பெரியாரின் தீவிரத்தொண்டரான இயக்குநர் திரு வேலு பிரபாகரன் அவர்கள், "பெரியார் கருத்துக்களை தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தபோது" திரு வேலுபிரபாகரனே எதிர்பாராத பெரும் தொகையை கொடுத்து, அப்படத்தை வெளியிட எதற்காக ரஜினி சார் உதவி செய்ய வேண்டும்?
 
பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் திரு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அவர்கள். எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.