மாற்றுத்திறனாளிகளை காக்க வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் வழங்கப்பட்டது.
காலை 9.30 மணிக்கு வழங்கும் இந்நிகழ்ச்சியானது, சரியாக தொடங்கப்பட்ட நிலையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் வருகை தந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேல்தளத்தில் நடைபெற்ற மத்திய அரசின் திட்டங்களின் அனைத்து துறை அதிகாரிகளிடையே திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளிகள் சுமார் 1 ½ மணி நேரம் காத்திருந்த நிலையில், பரத பிரதமர் மோடியின் திட்டங்களை குறித்து விவாதித்ததோடு, தாமதமாக வந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் பின்னர் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் 8 நபர்களுக்கு இரு சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்களை இலவசமாக வழங்கினர். இந்நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடம் மட்டுமில்லாமல், மாற்றுத்திறனாளிகளிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.