Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

4 விடைகளும் தவறானவை: குரூப் 4 தேர்வில் நடந்த குழப்பம்

Last Modified ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (22:30 IST)
தமிழக அரசு பணியாளா் தோ்வாணையம் இன்று நடத்திய குருப் 4 தேர்வை 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 போ் எழுதினர். வெறும் 9 ஆயிரத்து 351 பணியிடங்களுக்காக இந்த தேர்வு இன்று தமிழகம்
முழுவதும் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்றைய தேர்வில் இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் குறித்து கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்விக்கான 4 விடைகளில் ஒன்று கூட சரியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாகூர் பிறந்தது 1861-ஆம் ஆண்டு மே மாதம் ஏழாம் தேதியாகும். ஆனால் தேர்வுத்தாளில் கொடுக்கப்பட்டிருந்த நான்கு விடைகளிலும் இந்த சரியான பதில் இடம்பெறவில்லை. இதனால் தேர்வெழுதியவர்கள் குழப்பத்திற்கு ஆளாகினர்.

இதுகுறித்து தமிழக அரசு தேர்வானையம் விளக்கமளித்தபோது, 'தேர்வு விடைகள் தொடர்பாக மாறுபட்ட கருத்து இருந்தால் தேர்வர்கள் தெரிவிக்கலாம் என்றும், உத்தேச விடை வெளியான பிறகு 7 நாட்களுக்குள் அதில் தவறேதும் இருந்தால் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :