1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (18:56 IST)

இன்று இரவு அரசு பேருந்துகள் இயங்காது: அதிரடி அறிவிப்பு

bus
வங்கக்கடலில் தோன்றியுள்ள மான்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இரவு ஒரு சில மாவட்டங்களில் பேருந்துகள் இயங்காது என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் கடலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று இரவு அரசு பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
புயல் காரணமாக மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து தெரிவித்துள்ளது 
 
மேலும் தனியார் வாகனங்களும் மிகவும் கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே புயல் காரணமாக நாளை 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
 
Edited by Mahendran