திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2022 (15:14 IST)

புயல் காரணமாக ஊரகத் திறனாய்வுத் தேர்வு தேதி மாற்றம்!

exam
வங்கக்கடலில் தோன்றியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் புயல் காரணமாக ஊரக திறனாய்வு தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றது.
 
இந்த நிலையில் ஊரக திறனாய்வு தேர்தி டிசம்பர் 10ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 17ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக ஊரக திறனாய்வு தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva