1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (17:29 IST)

மாண்டஸ் புயல்:" சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

மாண்டஸ் புயல் காரணமாக நாள் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 620 கிமீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.

இந்த மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்ககூடும் என்றும், இதனால்  தமிழகத்தில் நாளை முதல் 3  நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 6 கிமீ வேகத்திலிருந்து 11 கிமீ ஆக அதிகரித்துள்ளது.

எனவே நாளை நள்ளிரவில் புதுச்சேரி – ஸ்ரீகரிகோட்டா இடையே மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளது.
 

இந்த நிலையில், மாண்டஸ் புயல் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய  9 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited By Sinoj