வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (08:32 IST)

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் தேதி: முக்கிய ஆலோசனை

குரூப்-2, குரூப்-4 உள்பட அனைத்து வகை தேர்வுகளையும் எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நாளை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 உள்பட 38 வகையான தேர்வுகளை நடத்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது
 
இதனை அடுத்து நாளை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் நடத்தும் தேதி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அதன் பின்னர் அதிகாரப்பூர்வமாக தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் இந்த ஆண்டு அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி சேர்க்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து நாளை அதிகாரிகள் ஆலோசனை செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது