புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 14 அக்டோபர் 2021 (17:52 IST)

காஞ்சிபுரத்தில் கொலையான டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு நிதியுதவி!

சமீபத்தில் காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் ஊழியர் ஒருவர் மர்மமான நபர்கள் மூலம் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இந்த கொலை காரணமாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் டாஸ்மாக் ஊழியர்கள் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொலையாளிகளை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொலையான டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது 
 
இந்த கோரிக்கை தற்போது பரிசீலிக்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் மர்ம நபர்கள் தாக்கியதில் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் துளசிதாஸ் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி மற்றும் அவருடைய மனைவிக்கு அரசு பணி என தமிழ்நாடு அரசு அறிவிப்பு செய்துள்ளது