திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (12:23 IST)

உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை மதுக்கடைகளுக்கு தடை! – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அப்பகுதிகளில் மதுக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் அக்டோபர் 4 முதல் 9 வரை தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட தமிழக தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதனால் மது வாங்க அருகில் உள்ள மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுமே என மதுப்பிரியர்கள் கவலையில் உள்ளதாக கூறப்படுகிறது.