1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (10:34 IST)

நிவாரணமே வேண்டாம், தண்ணிய வெளியேத்துனா போதும்: வேதனையில் திருவள்ளூர் மக்கள்..!

Chennai Rain
தமிழக அரசின் நிவாரணமே எங்களுக்கு தேவையில்லை, தேங்கி கிடக்கும் தண்ணியை வெளியேற்றினாலே போதும் என்று திருவள்ளூர் மாவட்ட மக்கள் கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் வீட்டிற்குள் புகுந்தது. 
 
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் நகராட்சியில் உள்ள சில பகுதிகளில் 10 நாட்கள் ஆகியும் இன்னும் வெள்ளை நீர் வடிக்கவில்லை என அந்த பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். 
 
நிவாரணத் தொகை கூட எங்களுக்கு வேண்டாம் வெள்ளை நீரை அகற்ற அரசு உதவி செய்தாலே போதும் என பத்திரிகையாளர்களிடம்  அந்த பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.  இதனை அடுத்து பொறியாளர்களை பயன்படுத்தி வெள்ளை நீரை அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran