1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 13 டிசம்பர் 2023 (18:35 IST)

2015ல் நாங்க கொடுத்த ரூ.5000, இன்றைக்கு ரூ.15000க்கு சமம்: ஜெயகுமார்

2015 ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோது நாங்கள் கொடுத்த ரூ.5000  இன்றைய 15,000 ரூபாய்க்கு சமம் என்றும் அதனால் 6000 ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக 12000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
சென்னை பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
2015 ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அவர்கள் 5000  ரூபாய் கொடுத்தார். அன்றைய விலைவாசிக்கு இன்றைய விலைவாசிக்கும் வித்தியாசம் உள்ளது. நாங்கள் அன்று கொடுத்த 5000 இன்று 15 ஆயிரம் ரூபாய்க்கு சமம். எனவே திமுக அரசு 12000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 
Edite by Siva