திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 ஜூலை 2019 (19:36 IST)

பேருந்தும் காரும் மோதி விபத்து – அனைவரின் உயிரையும் காப்பாற்றிய ஒற்றை மரம்

பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவருக்கும் அடிப்படமல் ஒற்றை மரமொன்று காப்பாற்றிய சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கேத்தனூர் பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. அந்த பக்கமாக சென்றுக் கொண்டிருந்த கார் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வலது பக்கமாக பெட்ரோல் பங்கை நோக்கி மெதுவாக திரும்பியது. அப்போது காருக்கு பின்னால் வேகமாக வந்த பேருந்து ஒன்று கார் திரும்புவதை பார்த்து உடனடியாக ப்ரேக் போட முடியாமல் அதுவும் வலது பக்கமாக திரும்பி சரிந்தது.

சரிந்த பேருந்தும் காரும் பெட்ரோல் பங்க் அருகே இருந்த மரத்தில் சாய்ந்து மீண்டும் நிமிர்ந்து நின்றன. காரையும், பேருந்தையும் அந்த மரம் தாங்கியதால் மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.