மனைவியை தவறாக படம் பிடித்த கணவன் – பணம் கேட்டு மிரட்டல்

mobile
Last Modified வியாழன், 25 ஜூலை 2019 (17:36 IST)
மனைவியுடன் இருக்கும் முதலிரவு காட்சிகளை படம்பிடித்து வைத்து கொண்டு பணம் கேட்டு மிரட்டிய கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலையில் கண் மருத்துவராக பணிபுரிபவர் ஷ்யாமளா. இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த சத்தியநாராயணா என்ற இஞ்சினீயருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அதற்கு பிறகு கணவருடன் ஆந்திராவில் வாழ்ந்து வந்துள்ளார் ஷ்யாமளா.

இந்நிலையில் தனது கணவர் ரகசியமாக அடிக்கடி மொபைலில் ஏதையோ பார்ப்பதை ஷ்யாமளா பார்த்துள்ளார். ஒருநாள் கணவருக்கு தெரியாமல் அவரது மொபைலை எடுத்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. ஷ்யாமளாவுடனான முதலிரவு சம்பவங்களை மொபைலில் ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறார் சத்தியநாராயணா. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷ்யாமளா கணவருடன் சண்டையிட்டுள்ளார். அந்த வீடியோவை டெலிட் செய்யும்படி கூறியிருக்கிறார். அதற்கு அவரது கணவர் மறுத்துள்ளார்.

கடைசியாக இதுகுறித்து தனது பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார் ஷ்யாமளா. அவர் பெற்றோரும் சத்தியநாரயணாவிடம் பேசி பார்த்திருக்கிறார்கள். அவர்களை ஆபாசமாக திட்டியுள்ளார் அவர். இதற்கு மேல் தங்கள் பெண் அங்கே நிம்மதியாக வாழ முடியாது என முடிவெடுத்த அவர்கள் பெண்ணுக்கு கொடுத்த வரதட்சணையை கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

அதற்கு கொடுக்க முடியாது என்று கூறியதுடன், 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். தராத பட்சத்தில் முதலிரவு வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என கூறியிருக்கிறார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் ஷ்யாமளாவின் பெற்றோர். வழக்குப்பதிவு செய்த போலீஸார் சத்தியநாராயணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவனே மனைவியை தவறாக வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :