வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 மார்ச் 2023 (09:04 IST)

தோள் சீலை போராட்டம் 200வது நினைவுநாள்! – தமிழ்நாடு, கேரளா முதல்வர்கள் பங்கேற்பு!

Mk Stalin Pinarayi Vijayan
இன்று நாகர்கோவிலில் நடைபெற உள்ள தோள் சீலை போராட்ட நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள முதல் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

200 ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கேரள பகுதிகள் மற்றும் குமரி பகுதிகளில் பல்வேறு அடக்குமுறை சட்டங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று குறிப்பிட்ட சில சமுதாய பெண்கள் தோள்சீலை அணியக்கூடாது என்ற சட்டம். அவ்வாறாக மார்பை மறைக்கும் வகையில் சீலை அணியும் பெண்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த அடக்குமுறையை எதிர்த்து போராட்டம் வெடித்தது. பல பகுதிகளிலும் மக்கள் தோள்சீலை அணியும் போராட்டத்தை மேற்கொண்டனர். இடைவிடாத போராட்டத்தின் பலனாக இந்த முறை நீக்கப்பட்டது.

தோள் சீலை அணிவதற்காக பெண்கள் போராடி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் விதமாக இன்று நாகர்கோவிலில் தோள் சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நினைவுநாள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Edit by Prasanth.K