வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2022 (16:02 IST)

நாகர்கோவில் - சென்னை: தீபாவளிக்கு மறுநாள் சிறப்பு ரயில் என ரயில்வே அறிவிப்பு!

Train
தீபாவளிக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 25ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 
 
தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக தீபாவளிக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 25-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்க இருப்பதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது 
 
நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரம் வரை செல்லும் இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 3 மணிக்கு கிளம்பும் அந்த ரயில் மறுநாள் காலை 3 மணிக்கு சென்னை தாம்பரம் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது செய்யப்பட்டு வருவதாகவும் தேவையான பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran