வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (17:44 IST)

நாஞ்சில் சம்பத் உடல் நலம் குறித்து கேட்டறிந்த முதல்வர் முக.ஸ்டாலின்

chess stalin
நாஞ்சில் சம்பத்  உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  நிலையில் அவரது உடல் நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள சிறந்த பேச்சாளரும் இலக்கியவாதியுமான   நாஞ்சில் சம்பத், வைகோவின் மதிமுகவின் பல ஆண்டுகளாக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர்.

அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த 2012 ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துளார். அக்கட்சியில் கொள்கை பரப்பு துணைச்செயலாளராக பொறுப்பு வகித்தார்.

அவர் மறைவுக்குப் பின், தினகரன் ஆதரவாளராக இருந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் முக்கிய பொதுக்கூட்டங்கள், இலக்கிய  நிகழ்வுகளில் பங்காற்றி வருகிறார்.

சமீபத்தில் வெளியான ஆர்.கே. பாலாஜி படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வருகிறார்.

இந்த நிலையில், முதல்வர் முக. ஸ்டாலின், நாஞ்சில் சம்பத்தின் உடல் நலம் குறித்து, அவரது மகன் சரத் பாஸ்கருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

மேலும்,  மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்,  நாகர்கோவில் மா நகராட்சி மேயர் மகேஷ் ஆகியோரை தொடர்புகொண்டு,   நாஞ்சில் சம்பத்திற்கு வேண்டிய மருத்துவ உதவிகள்  செய்யும்படி கூறியுள்ளார்.