வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2017 (13:03 IST)

2019ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ; எடப்பாடிக்கு ஷாக் கொடுக்கும் தம்பிதுரை

வருகிற 2019ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலையும் நடத்துமாறு துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


 

 
2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். அதன் பின் அவர் மரணம் அடைந்ததால் ஓ.பி.எஸ் முதல்வரானார். அதன் அவரை அந்த பதவியிலிருந்து நீக்கிவிட்டு, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா தரப்பு. இந்த ஆட்சியின் ஆயுட்காலம் 2011ம் ஆண்டு வரை உள்ள நிலையில், 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில், துணை சபாநாயகர் தம்பிதுரை மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், பாராளுமன்ற தேர்தலோடு, சட்டசபை தேர்தலையும் நடத்துவதற்கு தான் ஆதரவு தருவதாக குறிப்பிட்டுள்ளார். 2019ம் ஆண்டு பிப்ரவர் மாத இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கமே தேர்தலை நடத்த சரியான நேரம் எனவும், அந்த நேரத்தில் பள்ளிகளுக்கு தேர்வு, கோடை வெப்பம் மற்றும் மழை என எதுவும் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.  அதோடு, பாராளுமன்ற தேர்தலோடு, 20 மாநிலத் தேர்தலை நடத்துவதன் மூலம், தேர்தலுக்கான செலவும் அரசுக்கு குறையும். அந்த பணத்தை மக்கள் நடத்திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும்” எனவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
2011ம் ஆண்டு வரை தற்போதுள்ள ஆட்சியின் ஆயுட்காலம் உள்ள நிலையில், 2019ம் ஆண்டிலேயே சட்டசபை தேர்தலை நடத்துமாறு, தம்பிதுரை கடிதம் எழுதியுள்ள விவகார்ம எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தொடக்கம் முதலே சசிகலாவின் ஆதரவாளராகவே தம்பிதுரை தன்னை காட்டிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.