1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2017 (10:14 IST)

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் கனமழை: அவசர உதவி எண்கள் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் மழை சேதங்களை உடனுக்குடன் பராமரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.



 
 
இந்த நிலையில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் கனமழை பாதிப்பு இன்னும் ஐந்து நாட்களுக்கு இருக்கும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதை அடுத்து அந்த மாவட்டங்களில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்பு அடைந்தவர்கள் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொண்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
திருவள்ளூர் மாவட்டம்: பருவமழை பாதிப்புகள் பற்றி 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 044-27664177 மற்றும் 044-27666746  என்ற தொலைபேசி எண்களிலும் புகார் அளிக்கலாம்
 
காஞ்சிபுரம் மாவட்டம்: பருவமழை பாதிப்புகள் பற்றி 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 044-27237107, 044-27237207 என்ற எண்களிலும் புகார் கூறலாம்
 
சென்னை மாவட்டம்: கனமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகார்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1913 மூலமும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044-25367823, 25384965, 25383694 25619206 தொலைபேசி எண்கள் மூலமும் புகார்களை தெரிவிக்கலாம். அதுமட்டுமின்றி 9445477662 மற்றும் 9445477205 என்கிற எண்கள் மூலம் வாட்ஸ் ஆப்பிலும் புகார்களை பதிவு செய்யலாம்
 
தஞ்சை மாவட்டம்: பருவமழை பாதிப்புகள் குறித்து 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்