கனமழை எதிரொலி: காஞ்சிபுரம், திருவள்ளூர் கலெக்டர்கள் அதிரடி உத்தரவு


sivalingam| Last Modified திங்கள், 30 அக்டோபர் 2017 (14:33 IST)
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகின்றது. மழை காரணமாக பள்ளி, கல்லூரி விடுமுறை குறித்து எந்த அறிவிப்பும் வெளிவராததால் இன்று மாணவர்கள் மழையில் நனைந்து கொண்டே பள்ளி, கல்லூரிக்கு சென்றனர்.


 
 
இந்த நிலையில் காலையில் இருந்தே திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களை ஒரு மணி நேரத்திற்கு முன்பே வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். 
 
இந்த நிலையில் தமிழக அரசு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் வெள்ளம் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சற்று முன்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :