சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

Chennai
Sugapriya Prakash| Last Modified திங்கள், 30 அக்டோபர் 2017 (19:10 IST)
கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

 
 
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. எனவே, நாளை சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :