Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அம்பானி மட்டுமல்ல இது ஏழைகளுக்கான பட்ஜெட்டும் கூட - தமிழிசை பேட்டி

Tamilisai
Last Modified வியாழன், 1 பிப்ரவரி 2018 (16:06 IST)
மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட் ஆரோக்கியமான பட்ஜெட் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். எனவே தேர்தலை கவனத்தில் வைத்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த வருட பட்ஜெட் தாக்கலில் தென் இந்தியா புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்னிந்தியாவில் இருக்கும் மூன்று மாநிலங்களுக்கு முக்கியமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அதேபோல், கர்நாடகாவில் அடுத்து தேர்தல் வருவதால், பெங்களூர் சார்ந்து சில நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாநிலங்களுக்கு பெரிய அளவில் திட்டங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடப்படவில்லை.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன் “இது ஆரோக்கியமான பட்ஜெட். நாடு மட்டுமல்ல வீட்டு பொருளாதார வளர்ச்சி கொண்ட பட்ஜெட் இது. மேலும், இந்த பட்ஜெட் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான பட்ஜெட் இல்லை. அதானியோ, அம்பானியோ மட்டும் பயனடைவர் எனக் கூறும்படி இல்லாமல், சிறு குறு தொழில் செய்யும் மக்களுக்கும் உதவியான பட்ஜெட்” என கருத்து தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :