Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் நடைபெற்ற நிகழ்ச்சி

admk
Last Modified சனி, 14 ஏப்ரல் 2018 (16:29 IST)
கரூர் மாவட்டத்தில், கரூர் நகராட்சிக்குட்பட்ட 30 வது வார்டு (ராமாக்கவுண்டனூர் பஸ் ஸ்டாப்), 31 வது வார்டு (அருணாச்சலா நகர் பள்ளி வாசல் அருகே), 32 வது வார்டு (வடக்கு தெரு மாரியம்மன் கோயில் அருகில்), 37 வது வார்டு (ஹவுசிங் போர்டு ரேஷன் கடை அருகில்) ஆகிய இடங்களில் அரசு சார்பில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் பங்கேற்று அரசு விழாவானது மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.ஏராளமான அ.தி.மு.க வினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், எங்கேயுமே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை. இருப்பினும் வெறும் பேச்சுக்கள் மட்டுமே ஒலியில் வந்தது. மேலும் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களை வாங்குவதற்கு ஒரு விண்ணப்பம் ரூ 30 க்கு விற்கபட்டு, அதாவது அந்த ரூ 30 கொடுத்தால் தான் விலையில்லா வீட்டுமனைப்பட்டாவிற்கு மனுக்கள் தரப்படுமாம், மேலும் எழுத்துக் கூலி என்றும் கூறப்படுகின்றது. தமிழ்த்தாய் வாழ்த்தும் இல்லை, விலையில்லா வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, விலையில்லா தையல் மிஷின் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனுக்களுக்கு பணத்தை மட்டுமே இந்நிகழ்ச்சியில் வசூல் செய்ததாகவும் கூறப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.


 

 
சி.ஆனந்தகுமார். கரூர்


இதில் மேலும் படிக்கவும் :