செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 23 மார்ச் 2018 (19:38 IST)

கனிமொழியை வெளியேற்றவே ஸ்டாலின் ராஜினாமா நாடகம்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதை கண்டுக்கொள்வதாய் இல்லை. 
 
இது குறித்து அதிமுகவின் மூத்த தலைவர் தம்பிதுரை கூறியதாவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக கொண்டுவர வேண்டும் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர 54 எம்பிக்கள் தேவை. 
 
அதிமுக சார்பில் 37 எம்பிக்கள்தான் உள்ளோம். நாங்கள் எப்படி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியும்? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் காங்கிரஸ் ஆதரிக்குமா என்று ஸ்டாலின்தான் கூற வேண்டும். 
 
எங்களை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் சொல்கிறார். ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தேவையில்லாதது. இலங்கைத் தமிழர் பிரச்சினையின் போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளிவருவோம் என்று திமுக அறிவித்தது. 
 
மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரின் பதவியை காலி செய்வதற்காகவே ஸ்டாலின் அப்படி செய்தார். தற்போது, நாடாளுமன்றத்திலிருந்து கனிமொழியை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக எம்பிக்கள் ராஜினாமா குறித்து ஸ்டாலின் பேசுகிறார் என தெரிவித்தார்.