செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 31 மே 2019 (18:40 IST)

பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு பீப் புகைப்படங்கள்!

பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
"பிரதமர் மோதி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக கூட்டணி அரசு நேற்று மத்தியில் பதவியேற்றது. இதற்கிடையே பா.ஜனதா கட்சியின் டெல்லி பிராந்திய இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஹேக்கர்கள் Bharatiya Janata Party என்பதை Beef Janata Party என மாற்றியுள்ளனர். மாட்டிறைச்சி கட்சி, மாட்டிறைச்சி வரலாறு என அனைத்து பக்கங்களையும் மாற்றியுள்ளனர். இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படத்தால் நிரம்பியுள்ளது. இதனையடுத்து இணையதளத்தை சரிசெய்யும் பணியை பாஜக மேற்கொண்டது" என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.