1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 ஜூன் 2019 (18:11 IST)

’’ தூக்கமின்றி தவிக்கிறேன் ” மோடிக்கு கடிதம் எழுதிய சிறுமி...

அலிக்ஜோ வன்ட்கோ என்ற போலாந்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி கோவாவில் தங்கி படித்து வருகிறார். மல்டிபில் என்ட்ரி விசா பி2 மூலமாக தனது மகளை பார்க்க இந்தியாவுக்கு வந்த அலிக்ஜாவின் தாய் மார்த்தா கோட்லர்ஸ்கா இங்கே கூடுதல் நாட்கள் தங்கியதாக உத்திரகாண்ட் மாநில அரசு வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகம் அலிக்ஜாவின் தாயின் மீது குற்றம் சாட்டியது. ஆதலால் இந்தியாவுக்குள் நுழைய தடை செய்யப்பட்டு கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்.
அலிக்ஜாவை தன்னோடு அழைத்து செல்வதற்கு மட்டும் அனுமதி தரப்பட்டதால் இப்போது அலிக்ஜாவாலும் இந்தியாவிற்கு வரமுடியவில்லை.ஆதலால் அலிக்ஜாவால் ஏப்ரல் மாதத்திலிருந்து பள்ளிக்கு செல்லமுடியவில்லை.இது குறித்து அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் அவர்களுக்கு கடிதம் எழுதியும் எந்த பதிலும் இல்லை.
 
எனவே தற்போது ட்விட்டர் மூலம் மோடி அவர்கள்க்கும் தற்போதுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கருக்கும் கைப்பட சிறுமி அலிக்ஜா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் 
“தற்போது நான் என் அம்மாவுடன் இருந்தாலும் இந்தியாவைப்பற்றிய நினைப்பாகவே இருக்கிறேன். எனக்கு இந்தியாவைத்தான் தெரியுமென்பதால் அம்மாவோடு இருந்தாலும் தனிமையில் இருப்பதாகவே உணர்கிறேன்.

இந்து கலாசாரத்தில் மிகுந்த ஈடுபாடுள்ள நான், பத்ரிநாத், கேதாரிநாத் கோயில்களுக்கெல்லாம் சென்றுள்ளேன். இந்தியா திரும்புவதில் எனக்கு உதவும்படி சிவனையும், நந்தா தேவியையும்தான் தினமும் வேண்டுகிறேன்.

கோவாவிலுள்ள எனது பள்ளிக்கு செல்லமுடியாததாலும் அங்குள்ள விலங்கு மீட்பு மையத்தில் நான் பராமரிக்கும் பசுக்கள், நான் இல்லாமல் தவித்துப்போகுமே என்றும் மன உளைச்சல் காரணமாக தூக்கமின்றித் தவிக்கிறேன்.” என்று தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.
இந்தியாவுக்குள் நுழைவதற்க்கு தடையாக உள்ள கறுப்பு பட்டியலிலிருந்து எனது தாயின் பெயரை நீக்கவேண்டும் என்று சிறுமி அலிக்ஜா தனது கடிதத்தில் உருக்கமாக பாரத பிரதமர்  நரேந்திர மோடிக்கு எழுதியுள்ளார்.அலீக்ஜாவின் கடிதம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவப்பட்டு வருகிறது. தற்போது இருவரும் கம்போடியாவில் தங்கியிருந்து இந்தியாவிற்குள் மீண்டும் வருவதர்க்கான முயற்சியில் இருக்கின்றனர்.