Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கிடுகிடுவென உயர்ந்த சன் நெட்வொர்க் பங்குகள்: காரணம் இதோ...

Last Updated: புதன், 14 மார்ச் 2018 (17:03 IST)
பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் இருந்து தாயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் சன் நெட்வொர்க் பங்குகள் உயர்ந்துள்ளன. 
 
பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. 
 
பல வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லாததால் இந்த வழக்கிலிருந்து தாயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கப்பட்டனர். 
 
இதன் எதிரொலியாக சன் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகள் வேகமாக உயர்ந்துள்ளன. தீர்ப்பு வெளியாகிய ஒரு மணி நேரத்தில்  கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் நெட்வொர்க் பங்குகள் வேகமாக உயர்ந்துள்ளன. 
 
890.60 புள்ளிகளாக இருந்த சன் நெட்வொர்க் பங்குகள் தீர்ப்பு வெளியாகியதும் கிடுகிடுவென 944.00 புள்ளிகளை எட்டியது. இதேபோல்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு வெளியாகி ஆர்,ராசா மற்றும் கனிமொழி விடுதலை ஆன போதும் சன் நெட்வொர்க் பங்குகள் உயர்ந்தது.


இதில் மேலும் படிக்கவும் :