1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 14 மார்ச் 2018 (16:11 IST)

பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

பி.எஸ்.என்.எல் முறைகேடு வழக்கில் இருந்து தாயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

 
பி.எஸ்.என்.எல் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தி  அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு விசாரணை பல வருடங்களாக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று அதன் தீர்ப்பு வெளியானது. எனவே, நீதிமன்றத்தில் கலாநிதிமாறன், தயாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேரும் ஆஜராகியிருந்தனர்.
 
தீர்ப்பை வாசித்த நீதிபதி, இந்த வழக்கிலிருந்து தாயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லாததால் அனைவரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதி கூறினார். 
 
ஏற்கனவே 2ஜி வழக்கில் ராஜா மற்றும் கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பி.எஸ்.என்.எல். வழக்கிலும் மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டது திமுகவினருக்கு ஆனந்த அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.