Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திடீர் திருப்பம் : பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

Last Modified புதன், 14 மார்ச் 2018 (14:40 IST)
பி.எஸ்.என்.எல் முறைகேடு வழக்கில் இருந்து தாயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

 
2004-7ம் ஆண்டில், பி.எஸ்.என்.எல் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தி  அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு விசாரணை பல வருடங்களாக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று அதன் தீர்ப்பு வெளியானது. எனவே, நீதிமன்றத்தில் கலாநிதிமாறன், தயாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேரும் ஆஜராகியிருந்தனர்.
 
தீர்ப்பை வாசித்த நீதிபதி, இந்த வழக்கிலிருந்து தாயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லாததால் அனைவரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதி கூறினார். 
 
ஏற்கனவே 2ஜி வழக்கில் ராஜா மற்றும் கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பி.எஸ்.என்.எல். வழக்கிலும் மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டது திமுகவினருக்கு ஆனந்த அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :