புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (18:23 IST)

ஆசிரியரை அடித்த பள்ளி மாணவர்கள்: காரணம் என்ன??

கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்யாண சுந்தரம் என்பவர் கும்பகோணத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் உயிரியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் பிறந்த நாளை பள்ளி வளாகத்தில் அந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கொண்டாடியுள்ளனர். இதனைக் கண்ட கல்யாண சுந்தரம், அந்த மாணவர்களை கண்டித்து, பள்ளியின் முதல்வரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

இதனால் கோபமடைந்த மாணவர்கள், பள்ளி முடிந்து ஆசிரியர் வெளியே வந்தவுடன் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் ஆசிரியருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் தங்களுக்கு பாடம் கற்று கொடுக்கும் ஆசிரியரையே தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.