1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 19 டிசம்பர் 2018 (12:18 IST)

சாலைகளில் பேனர் வைக்க இடைக்காலத் தடை – உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை மாநகராட்சி சாலைகளில் வைக்கப்படும் பேனர்களால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுவதாகவும் அதனால் பேனர் வைக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை மாநகராட்சி சாலைகள் முழுவதும் கட்சி சார்பின்றி பேனர்களால் நிறைந்து வழிகிறது. இப்படி  வைக்கப்படும் பேனர்கள் பெரும்பாலானவை முறையான அனுமதியின்றி வைக்கப்படுபவைதான். வைக்கப்படும் பேனர்களில் அனுமதி அளித்த அதிகாரியின் பெயர், பேனர் வைப்பவரின் பெயர் மற்றும் அனுமதிக்கப்பட்ட காலம் ஆகியவை இடம்பெறவேண்டும் என்ற விதியையும் யாரும் பின்பற்றுவதில்லை. இத்தகைய பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
பேனர்கள் வைப்பவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்று கூறி டிராபிக் ராமசாமி தரப்பில் பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.


அது சம்மந்தமான வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசியல் கட்சிகள் பேனர் வைக்க இடைக்காலத்தடை விதித்துள்ளது. மேலும் பேனர் வைக்க அனுமதி அளிப்பதில் விதிகளையும், நீதிமன்ற உத்தரவுகளையும் பின்பற்றுவோம் என தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் கண்டனம் தெர்வித்துள்ளது.