‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் டீஸரை வெளியிட்ட சகாயம் ஐஏஎஸ்

tf
CM| Last Updated: புதன், 9 மே 2018 (15:05 IST)
‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் டீஸரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார் சகாயம் ஐஏஎஸ்.
சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் ‘டிராஃபிக் ராமசாமி’. விக்கி இயக்கியுள்ள இந்தப் படத்தில், டிராஃபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். அவருடைய மனைவியாக ரோகிணி நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், சீமான், குஷ்பூ, ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, கஸ்தூரி, மனோபாலா, மதன்பாப் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளார் சகாயம் ஐஏஎஸ். “டிராஃபிக் ராமசாமி ஒருஅரியவகை சமூக செயற்பாட்டாளர் . தைரியமாக சாலையில் இறங்கிப் போராட்டம் செய்பவராக தொடங்கி பல்வேறு தளங்களில்  இந்த 85 வயதிலும் தன்னிச்சையாகவும் தன்னம்பிக்கையோடும்  அநீதிக்கு எதிராகப்  போராடி வரும்  போராளி. அவரின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக ‘டிராஃபிக் ராமசாமி’ படம் உருவாகியுள்ளது.
man
துணிச்சலான கருத்துகள் கூறித் தன் படங்களின் மூலம்  விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்,  படத்தில்  டிராஃபிக் ராமசாமியாக நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின்   முன்னோட்டம் பார்த்தேன்.இது நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்கும் என்று நம்புகிறேன், வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார் சகாயம் ஐஏஎஸ்.


இதில் மேலும் படிக்கவும் :