புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 17 அக்டோபர் 2018 (15:45 IST)

எடப்பாடியின் ஊழல் பாலம் உடையும்: ஸ்டாலின் ட்விட்!

நெடுஞ்சாலையில் துறையில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சம்பந்தி மற்றும் உறவினர்களுக்கு டெண்டர்களை கொடுத்து முறைகேடு செய்ததாகவும் திமுக தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
இது தொடர்பான விசாரணையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையின் மீது திருப்தி இல்லை என்று கூறிய நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்து உள்ளது. இதனால், முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளது. 
 
இந்நிலையில் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ட்விட் போட்டுள்ளார். அதில், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
 
கமிஷன் - கலெக்‌ஷன் - கரப்ஷன் அதிமுக ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம் என்றும், விரைவில் எடப்பாடியின் ஊழல் பாலமும் உடைந்து விழும் எனவும் பதிவிட்டுள்ளார்.