செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (18:03 IST)

குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு: குஷியில் முதல்வர்

குஜராத் அரசின் சார்ப்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விழா ஒன்றிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் சிலை 182 மீட்டர் உயரத்தில் குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலை இதுதான். 
 
இந்த சிலை திறப்பு விழா படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 ஆம் தேதி நடக்க உள்ளது. இதனை மோடி திறந்து வைக்க உள்ளார். எனவே, இந்த விழாவில் பங்கேற்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு குஜராத் பழங்குடி முன்னேற்றம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கண்பத் வாசவா தலைமையிலான சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலகம் வந்து அழைப்பிதழ் கொடுத்தனர். 
 
சர்தார் வல்லபாய் படேலின் சிலை, நர்மதை நதிக்கரையில் ரூ.2,389 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பித்தக்கது.