திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 27 ஜனவரி 2020 (14:19 IST)

அடிமை அரசல்ல... எதிர்க்க வேண்டியதை எதிர்ப்போம் - ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி !

மொழிப்போர் தியாகிகளுக்கான நினைவுப் பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக முதவர் எடப்பாடி பழனிசாமி, ஆளும் அதிமுக அரசு பாஜவின் அடிமை அரசு அல்ல எதிர்க்க வேண்டியதை எதிர்த்து நிற்போம் என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசை பாஜவின் அடிமை அரசு என விமர்சித்து வருகிறார். 
 
இந்நிலையில், இன்று மொழிப்போர் தியாகிகளுக்கான நினைவுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர்,ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக அரசை பாஜவின் அடிமை அரசு என கூறிவருகிறார்.அதிமுக அடிமை அரசு அல்ல; எதை எதிர்க்க வேண்டுமோ அதை எதிப்போம்! மக்களுக்கான  நல்ல திட்டங்களை ஆதரிப்போம் என தெரிவித்துள்ளார்.