CAA - வுக்கு எதிரான பேரணியில் வன்முறை - வாகனங்களுக்கு தீ வைப்பு !
சமீபத்தில் மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் பல்கலைக் கழக, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் போராடி வருகின்றனர்.
தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராடியவர்கள் என்.எஸ்.ஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிஏஏ-வுக்கு எதிராக தடைவிதிக்க நீதிபதிகள் மறுத்துள்ளனர்.
மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தவறு நடந்தால் மட்டுமே நாங்கள் தலையிடுவோம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் லோகர்தக்காவில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பேரணியில் வன்முறை ஏற்பட்டது. அப்போது கடைகள் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பேரணியில் ஈடுபட்டவர்கள் உள்பட 28 பேர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகிறது.
இந்நிலையில், அங்கு நிலவுகின்ற பதற்றத்தைக் குறைக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.