செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (17:18 IST)

சீமானின் பேச்சு முட்டாள்தனமானது... ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் இடைத்தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் அங்கு பிரச்சாரம் மேற்கொண்ட இயக்குநர், நடிகர் மற்றும்  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என பன்முகம் கொண்டவரான் சீமான், ராஜீவ் காந்தியை கொன்றது சரிதான் என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன், சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக சட்டம் தனது கடமை செய்யும் என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் , சீமானின் பேச்சுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது கருத்தை ஆவேசமான பேசியுள்ளார்.
 
அவர் கூறியுள்ளதாவது :
 
ராஜிவ் காந்தி குறித்து சீமானின் கருத்து முட்டாள்தனமானது. இது போன்ற செயலை மானமுள்ள  மரத்தமிழன் செய்ய மாட்டான் எனத் தெரிவித்துள்ளார்.