திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2024 (10:24 IST)

சீமான் ஒரு நல்ல என்டர்டைனர், அவர் பேசுவதை ரசித்து, சிரித்து விலகிக் கொள்ள வேண்டும் -பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பேச்சு.

கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் குழு பயிலரங்கம் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில்  நடைபெற்றது இதில் பாஜக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளரும் மூத்த தலைவர் மாநாடு எச். ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
 
மேலும், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
நிகழ்ச்சியின் முடிவில் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.....
 
அப்போது பேசிய அவர் 
 
விசிக ஒரு வன்முறை அமைப்பு. அது இல்லாமல் அவர்களால் வாழ முடியாது. கரூரில் இந்தி மொழியில் போஸ்டர் வைத்த செல்போன் கடைக்கு விசிக குண்டர்கள் எதுக்கு போக வேண்டும். மியூசிக் காவலர் இந்தி எழுத்துக்களை கருப்பு மை வைத்து அளித்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.  கூட்டணி கட்சினு பார்க்காம அராஜகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன்.
 
(ஆண்டவன் இருக்கான் குமாரு) தமிழ் நல்லா பேசக்கூடிய கவர்னர் மீது தமிழக முதல்வர் இனவாத குற்றச்சாட்டு வைத்தார். உதயநிதி பதவியை முதல்வர் திரும்ப பெற வேண்டும். தமிழ் தாய் வாழ்த்து பாடலை உதயநிதியை பாட சொல்லிருந்தா இன்னும் தவறாக பாடியிருப்பார். தகுதி இல்லாதவர் உதயநிதி. டெக்னிக்கல் Fault என்கிறார்.
கொழுப்பு திமிறு என்கிறார். பேசக்கூடாத வார்த்தைகளில் கவர்னர் குறித்து பேசுகிறார். இப்போது உதயநிதி வெளியே போனா எதால அடிப்பாங்க... கவர்னரை ஆர்.எஸ்.எஸ் என்றனர் ஆர்.எஸ்.எஸ் ஆக இருப்பது எங்களுக்கு பெருமை.
 
நடிகர் விஜய் அரசியல் மூலமாக மக்கள் பணி செய்ய வருகிறார். இன்று அவரது மாநாடு நடக்கிறது அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவர் கொள்கை, கோட்பாடுகளை இன்னும் தெரிவிக்கவில்லை. பிறகு அதைப் பற்றி பேசலாம்.
 
பாஜக அமைப்பு தேர்தல் முடிந்ததும், தமிழகம் முழுவதும் கோவில்களில் கட்டணம் இல்லா இயக்கம் நடத்தப்படும். எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் நிகழ்வில் நடந்த தவறை சுட்டிக்காட்டியது போல், நானும் தவறு நடந்ததை சுட்டிக்காட்டி இருக்கிறேன். அது தவறில்லை. ஆனால், திமுக மானங்கெட்ட கூட்டம். உதயநிதி ஒரு தரங்கெட்ட அரசியல்வாதி.
 
பாஜகவுக்கும் திமுகவுக்கும் உறவு இருப்பதாக சீமான் விமர்சனம் செய்தது குறித்து எழுப்பிய கேள்விக்கு, சீமான் ஒரு எண்டர்டெய்னர். அவர் பேசுவதை ரசித்து சிரித்து விலகுங்கள் என்றார்.