செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2024 (09:53 IST)

பண மோசடி வழக்கில் உயர்நீதி மன்றத்தில் ஆஜராகிறார் நடிகர் விமல்!

நடிகர் விமல் தயாரிப்பில் 2018 -ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்"மன்னர் வகையறா"
 
இத்திரைபடத்தை தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை  சினிமா சிட்டி என்ற நிறுவனத்தின் சார்பில் கங்காதரன் பெற்றிருந்தார்.
 
இந்த விநியோக உரிமைக்காக அவர் மூன்று கோடி ரூபாயை திருப்பி கொடுக்கக்கூடிய டெபாசிட் என்கிற அடிப்படையில் நடிகர் விமலிடம் கொடுத்திருந்தார்.
 
ஆனால் படம் அவர் கொடுத்த தொகைக்கு ஈடாக வசூல் செய்யவில்லை.
 
எனவே ஒப்பந்தப்படி ஒரு கோடி ரூபாயை விமல் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
 
ஆறு ஆண்டுகள் ஆகியும் இதுவரை விமல் திருப்பி தராததால் விமல் அலுவலகத்திற்கு நடையாய் நடந்த கங்காதரன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்து உள்ளார்.
 
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் மீடியேசனுக்கு அனுப்பப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடிகர் விமல் ஆஜராகிறார்.